லாரிகளில் போதிய வசதி இல்லாமல் ஊழியர்களை ஏற்றிச் சென்ற 23 குற்றவாளிகள் பிடிபட்டனர்

ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR

இந்த ஆண்டின் முதல் பாதியில், லாரிகளில் ஊழியர்களை ஏற்றிச் செல்லும்போது ​​போதிய கூரை வசதி இல்லாதது அல்லது பாதுகாப்பான பெரிய கூரை வசதி இல்லாதது ஆகிய குற்றங்களுக்காக 23 பேர் பிடிபட்டனர்.

இதனை மூத்த போக்குவரத்து அமைச்சர் எமி கோர் நேற்று (ஆகஸ்ட் 2) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தவறான கல்வித்தகுதிகளை சமர்ப்பித்த “Work Pass” வைத்திருக்கும் 11 பேர் பிடிபட்டனர்

2011ஆம் ஆண்டு முதல், அனைத்து லாரிகளும் தங்கள் பின் தளங்களில் பயணிகளை ஏற்றிச்செல்லும் போது கூரைகளை பொருத்தியிருக்க வேண்டும் என்ற விதி நடப்பில் உள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் அது குற்றமாகும்.

முதல் முறை குற்றவாளிகளுக்கு S$1,000 வரை அபராதம், மூன்று மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மீண்டும் மீண்டும் அந்த குற்றத்தில் ஈடுபட்டால் தண்டனைகள் இரட்டிப்பாகும்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய தொற்று குழுமம்