பொது இடங்களில் நிர்வாண காட்சி… டெலிக்ராம்ல பார்க்க கட்டணம் – சிக்கிய பெண்ணுக்கு அபராதம்

NordWood Themes via Unsplash

சிங்கப்பூரில் பொது இடங்களில் சுமார் 18 தடவை நிர்வாணமாக காட்சியளித்த தம்பதிக்கு S$23,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கணவரான 50 வயதுமிக்க ஜெப்ரி சூ திஸி ஜாங்க்கு S$14,000 அபராதமும், அதே நேரத்தில் அவரது மனைவி 30 வயதான Nguyen Thi Anh Thyக்கு S$9,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

டெலிகிராம் மூலம் படங்களை பகிர்வதற்கு கட்டணச் சந்தா முறையையும் அவர்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

JB சோதனைச் சாவடியில் தானியங்கி சுங்க அனுமதி நிறுத்தம் – என்ன காரணம்?

தனது மனைவியை பொது இடத்தில் புகைப்படம் எடுத்தல், ட்விட்டர் மூலம் ஆபாச புகைப்படங்களை பரப்புதல் மற்றும் காவல்துறைக்கு தவறான தகவல்களை அளித்து உண்மையை மறைத்தல் ஆகிய மூன்று குற்றத்தை சூ ஒப்புக்கொண்டார். மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

Nguyen, பொது இடங்களில் நிர்வாணமாகத் தோன்றியது மற்றும் உண்மையை மறைத்தல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

ட்விட்டர் மூலம் ஆபாச புகைப்படங்களை பகிந்து வந்த அவர்கள், கூடுதல் ஆபாச படங்களுக்கு டெலிகிராம் சேனல் மூலம் கட்டணம் செலுத்தி பார்க்கும் முறையையும் அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.

அவர் மாதத்திற்கு S$24.99 கட்டணமாகவும், மூன்று மாதங்களுக்கு S$69.99 கட்டணமாகவும் வசூலித்ததாக Zaobao செய்தி கூறியுள்ளது.

சென்னை, கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு டன் கணக்கில் பறக்கும் தீபாவளி இனிப்புகள்