“முழு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்” என்ற நிலையை தக்க வைக்க இது கட்டாயம்!

Pic: Nuria Ling/TODAY

முதன்மையான தடுப்பூசிகளை போட்டு முடித்த 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள், கடைசி டோஸுக்குப் பிறகு 270 நாட்களுக்குள் mRNA தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

கோவிட்-19 தடுப்பூசிக்கான நிபுணர் குழு (EC19V) பரிந்துரைத்தபடி, சுகாதார அமைச்சகம் (MOH) இன்று ஜனவரி 5, செய்திக்குறிப்பில் இதனை கூறியது.

சிங்கப்பூரில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த ஆடவர்.. சடலமாக கண்டெடுப்பு

தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட mRNA அல்லாத தடுப்பூசிகள் மற்றும் WHO EUL தடுப்பூசிகளை பெற்ற நபர்களுக்கும் இது பொருந்தும்.

பிப்ரவரி 14, 2022 முதல், கடைசி டோஸுக்குப் பிறகு 270 நாட்களுக்குள் (தோராயமாக ஒன்பது மாதங்கள்) பூஸ்டர் டோஸைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

இல்லையெனில், முழு தடுப்பூசி டோஸ் போட்டுக்கொண்ட தகுதியை இழக்க நேரிடும் என்று MOH கூறியுள்ளது.

இவ்வாறான தடுப்பூசிகள், குறிப்பாக பூஸ்டர்கள், கோவிட்-19 மற்றும் ஓமிக்ரான் கிருமிகளுக்கு எதிராக கணிசமான பாதுகாப்பை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

சீன புத்தாண்டு நெருங்குகிறது… இதற்காக சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் கடுமை ஆகுமா?