சிங்கப்பூரில் நடைமுறை 2ன் மூலம் 2,996 பேருக்கும், PCR மூலம் 1,836 பேருக்கு தொற்று உறுதி

automated-immigration-lanes for foreigners pr
Joshua Lee

சிங்கப்பூரில் நேற்று ஜன., 26 நிலவரப்படி, புதிதாக 4,832 பேருக்கு COVID-19 பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இதில் 4,560 பேர் உள்ளூர் அளவிலும், மேலும் 272 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH கூறியுள்ளது.

சிங்கப்பூரில் ஒரே வீட்டில், வேறு வேறு குடும்பத்தைச் சார்ந்த நபர்கள் வாடகைக்கு இருக்கலாமா?

இறப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் சுகாதார அமைச்சகத்தின் (MOH) இணையதள தொற்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 850ஆக உள்ளது.

புதன்கிழமை பதிவான சம்பவங்களில், நடைமுறை 2 இல் 2,996 பேருக்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதில் 13 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் மற்றும் 2,983 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.

PCR சோதனைகள் மூலம் மேலும் 1,836 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 259 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் 1,577 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.

“செம்ம ஹேப்பி” – சிங்கப்பூரில் 2023 முதல் இந்த ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்!!