சிங்கப்பூரில் 5,000ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு!

administrative-service salary-increases-for
(via Getty Images)

சிங்கப்பூரில் நேற்று ஜன., 27 நிலவரப்படி, புதிதாக 5,469 பேருக்கு COVID-19 பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இதில் 5,090 பேர் உள்ளூர் அளவிலும், மேலும் 379 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH கூறியுள்ளது.

கல்லாங் MRT அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்…போதைப்பொருள் அருந்தி தற்கொலை

இறப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் சுகாதார அமைச்சகத்தின் (MOH) இணையதள தொற்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 850ஆக உள்ளது.

வியாழக்கிழமை பதிவான சம்பவங்களில், நடைமுறை 2ல் 3,571 பேருக்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் மற்றும் 3,553 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.

PCR சோதனைகள் மூலம் மேலும் 1,898 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 361 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் 1,537 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.

சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் காலை இழந்த தமிழக ஊழியருக்கு நீங்க நேரடியா உதவி செய்யலாம் – முழு விவரம்