சிங்கப்பூரில் 1000ஐ தாண்டிய தொற்று பாதிப்பு – 534 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

TODAY

சிங்கப்பூரில் நேற்று ஜன. 17 நிலவரப்படி, புதிதாக 1,165 பேருக்கு COVID-19 பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இதில் 631 பேர் உள்ளூர் அளவிலும், மேலும் 534 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH கூறியுள்ளது.

“ஏன்டா என் மகன அடிச்சே”… தகாத வார்த்தைகளில் திட்டிக்கொண்டு போதையில் சண்டை (வீடியோ): 9 பேரிடம் போலீஸ் விசாரணை

இறப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் சுகாதார அமைச்சகத்தின் (MOH) இணையதள தொற்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 843ஆக உள்ளது.

Omicron நோய்த்தொற்றுகள்

சிங்கப்பூரில் புதிதாக மொத்தம் 609 பேருக்கு Omicron நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அதில் 380 பேர் உள்ளூர் அளவிலும், 229 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH கூறியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் 293,014 COVID-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் வேலைப்பார்த்து வந்த வெளிநாட்டு ஊழியர் மாரடைப்பால் திடீர் மரணம்: கோரிக்கை விடுத்த பெற்றோர்..!