சிங்கப்பூரில் மேலும் 6 பேர் கொரோனாவால் உயிரிழப்பு – 60%க்கு கீழ் குறைந்த ஒட்டுமொத்த ICU விகிதம்

singaporeans-happiness survey
Photo: gov.sg

சிங்கப்பூரில் வியாழக்கிழமை (நவம்பர் 18) நிலவரப்படி, மேலும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

தினசரி கொரோனா தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மூன்று வாரங்களுக்கு பிறகு மிகக் குறைந்துள்ளது.

சிங்கப்பூரில் மொத்தம் 236 சந்தேக நபர்கள் மீது போலீசார் விசாரணை

புதிதாக உயிரிழந்தவர்கள் 57 மற்றும் 84 வயதுக்கு உட்பட்டவர்கள், அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன.

அந்த மருத்துவ பிரச்சனைகள் என்ன என்பதை சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிடவில்லை.

கடந்த அக்டோபர் 23க்குப் பிறகு, நேற்று வியாழக்கிழமை பதிவான COVID-19 இறப்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும்.

சிங்கப்பூரின் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 625ஆக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த தீவிர சிகிச்சை பிரிவு (ICU) விகிதம் சுமார் மூன்று வாரங்களுக்கு பிறகு முதல் முறையாக 60 சதவீதத்திற்கும் கீழே சரிந்தது.

சிங்கப்பூர்-மலேசியா இடையே நில வழி பயணம்: குடும்பங்களைப் பிரிந்து வாடும் ஊழியர்களுக்கு முன்னுரிமை!