சிங்கப்பூரில் புதிதாக மூன்று பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

Google Maps

சிங்கப்பூரில் வியாழன் (நவ. 25) நிலவரப்படி, புதிதாக மூன்று பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

மேலும், புதிதாக இறந்தவர்கள் 69 மற்றும் 74 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் MOH தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கான ஒரு மாத ஆண்டு இறுதி போனஸ்!

அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன. இந்த பிரச்சனைகள் என்ன என்பதை சுகாதார அமைச்சகம் குறிப்பிடவில்லை.

சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 681ஆக உயர்ந்துள்ளது.

அதே போல நேற்றைய நிலவரப்படி, ஒட்டுமொத்த தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) பயன்பாட்டு விகிதம் 56.8 சதவீதமாக இருந்தது. இது புதன்கிழமை 56.1 சதவீதமாக இருந்தது.

வியாழன் நிலவரப்படி, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் 258,785 COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன.

நிறுவனத்தை ஏமாற்ற போலியாக நடித்த வெளிநாட்டு ஊழியர் விடுவிப்பு