இந்த வாரம் எழுச்சியைக் கண்டுள்ள கோவிட் வழக்குகள் – இரண்டாவது பூஸ்டரை எடுக்குமாறு சுகாதார அமைச்சகம் பரிந்துரை !

COVID-19

சிங்கப்பூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை, அக். 4) மொத்தம் 6,888 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. முந்தைய நாளுடன் (2,587 வழக்குகள்) ஒப்பிடும்போது இது ஒரு பெரிய எழுச்சியை கண்டுள்ளது.

 

வாராந்திர தொற்று விகிதம் இப்போது 1.56 ஆக உள்ளது. நேர்மறையாக பதிவுசெயயப்பட்டவர்கள் 20 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் 2,902 பேர், 40 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களில் 2,143 பேர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது அக்டோபர் 4, மதியம் 12 மணி நேர நிலவரப்படி, மருத்துவமனையில் 325 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில்  11 பேரும் இருந்தனர். பாதிக்கும் மேற்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகள் 70 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள். மேலும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது பூஸ்டரை எடுக்குமாறு சுகாதார அமைச்சகம் கடுமையாக பரிந்துரை செய்துள்ளது.

 

சுகாதார அமைச்சகத்தின் (MOH) இணையதளத்தின்படி:

உள்ளூர் PCR: 434

உள்ளூர் ART: 6,454

இறக்குமதி செய்யப்பட்ட PCR: 10

இறக்குமதி செய்யப்பட்ட ART: 248

இறப்புகள்: 2