COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 36 பேரிடம் விசாரணை

COVID-19 rules breach investigate
(Photo: Singapore Police Force)

உரிமம் பெறாத பொது பொழுதுபோக்கு நிலையங்களில் COVID-19 பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறிய 36 பேரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இரண்டு தனித்தனியான சம்பவங்களில் அவர்கள் பிடிபட்டனர். மேலும், 24 முதல் 37 வயதுக்குட்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் நேற்று (ஜூலை 18) தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் ஜூலை 17ம் தேதி, சிலிகி சாலை (Selegie Road) மற்றும் தாகூர் லேன் (Tagore Lane) ஆகிய இடங்களில் உள்ள உரிமம் பெறாத இரு பொது பொழுதுபோக்கு நிலையங்களில் காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

சிலிகி சாலை

20 முதல் 31 வயதுக்குட்பட்ட, 14 ஆடவர்கள் மற்றும் ஒன்பது பெண்கள், சிலிகி சாலையில் உள்ள பொழுதுபோக்கு நிலையத்தில் பிடிபட்டனர்.

இந்த நிலையத்தை நடத்திவந்த 24 வயதுடைய இரண்டு ஆபரேட்டர்கள், மதுபானக் கட்டுப்பாடு (வழங்கல் மற்றும் நுகர்வு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தாகூர் லேன்

தாகூர் லேனில், 23 முதல் 38 வயதுக்குட்பட்ட இரண்டு ஆடவர்கள் மற்றும் 11 பெண்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அதனை நடத்தி வந்ததாக நம்பப்படும் 37 வயதான ஆபரேட்டர் கைது செய்யப்பட்டார்.