COVID-19: சிங்கப்பூரில் மேலும் இருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!

COVID-19: Singapore reports 2 more deaths
COVID-19: Singapore reports 2 more deaths

சிங்கப்பூரில் COVID-19 தொற்று காரணமாக மேலும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதில் 97 வயதான சிங்கப்பூர் பெண் மற்றும் 73 வயதான சிங்கப்பூர் ஆடவர் உயிரிழந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இதையும் படிங்க: சிங்கப்பூரில் அதிகாரிகளை அச்சுறுத்தியதற்காகவும், தவறாக பேசியதற்கும் ஒருவருக்கு 7 மாதங்கள் சிறை..!

வயதான பெண்மணி (சம்பவம் 1414) கடந்த செவ்வாய்க்கிழமை இரவு COVID-19 காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் இறந்தார். அவருக்கு கடந்த மாதம் ஏப்ரல் 7 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

மேலும் அவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் Lee Ah Mooi இல்லக் கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்.

மற்றொறு இறப்பு

73 வயதான ஆடவர் சம்பவம் 1528 என சிங்கப்பூரில் அடையாளம் காணப்பட்டவர், இவர் புதன்கிழமை COVID-19 காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் உயிரிழந்தார்.

இவருக்கு கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது, மேலும் உயர் இரத்த அழுத்தம், ஹைப்பர்லிபிடீமியா மற்றும் நீரிழிவு நோய் ஆகிய பிரச்சனைகள் இருந்ததாகவும் MOH குறிப்பிட்டுள்ளது.

இவர் முஸ்தபா ஷாப்பிங் மால் கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்.

சிங்கப்பூரில் தற்போது வரை மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 20ஆக உள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 788 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!