சிங்கப்பூரை இரண்டாவது-அதிக அபாய நிலையில் வகைப்படுத்திய நாடு

singapore air-ticket-prices-up-departing-flights
Pic: File/Reuters

சிங்கப்பூருக்கான பயண ஆலோசனை எச்சரிக்கையை “unknown” என்பதில் இருந்து “high” என்ற இரண்டாவது-அதிக அபாய நிலைக்கு அமெரிக்கா மீண்டும் மறுவகைப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நோய் தடுப்பு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு மையத்தால் (CDC) நேற்று ஜனவரி 10ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் வெற்றிபெற்ற இருவர்: தலா S$5.36 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டிச் சென்றனர்!

மேலும் பயணிகள் சிங்கப்பூருக்குச் செல்வதற்கு முன் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடாத பயணிகள் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஜனவரி 4 அன்று CDC மையத்தால், “very high” நிலையிலிருந்து “unknown” நிலைக்கு சிங்கப்பூர் மாற்றப்பட்டது.

AYE சாலையில் தீப்பிடித்து எரிந்த Porsche கார் (வீடியோ): தீயை அணைக்க போராடிய SCDF