COVID-19: மேலும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

COVID-19: Two more foreign worker dorms declared isolation areas; total at 21
COVID-19: Two more foreign worker dorms declared isolation areas; total at 21 (PHOTO: Screenshot/Google Maps)

COVID-19 பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மேலும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.

ஹோம்ஸ்டே லாட்ஜ் (Homestay Lodge) மற்றும் சாங்கி லாட்ஜ் 2 (Changi Lodge 2) ஆகியவை தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) புதன்கிழமை (ஏப்ரல் 22) அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம் (MOH)..!

இதனுடன் மொத்தம் 21 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தற்போதுவரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.

காக்கி புக்கிட் அவென்யூ 3 (Kaki Bukit Avenue 3)-இல் உள்ள ஹோம்ஸ்டே லாட்ஜ் மற்றும் தனா மேரா கோஸ்ட் ரோட்டில் (Tanah Merah Coast Road) உள்ள சாங்கி லாட்ஜ் 2 ஆகியவை தனிமைப்படுத்தப்பட்ட அறிவிப்புகள் இன்று வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட ப்ளாக்குகள்

ஹோம்ஸ்டே லாட்ஜில் – 23, 25, 27, 29, 33, 35 மற்றும் 37 ப்ளாக்குகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சாங்கி லாட்ஜ் 2ல் – 72, 74, 76 மற்றும் 78 ப்ளாக்குகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கும், விடுதிகளுக்கு வெளியேயும் இனி செல்ல முடியாது..!