சிங்கப்பூரில் ART சோதனை மூலம் 3,856 பேருக்கு தொற்றுநோய் உறுதி

Pic: File/TODAY

சிங்கப்பூரில் நேற்று ஏப்ரல் 2., நிலவரப்படி; புதிதாக 4,563 பேருக்கு COVID-19 பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இதில் 4,472 பேர் உள்ளூர் அளவிலும், மேலும் 91 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அரிய வாய்ப்பு: குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் – இலவசம்!

உயிரிழப்பு

மேலும் 2 பேர் கிருமி தொற்றால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகத்தின் (MOH) இணையதள தொற்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,272 ஆக உள்ளது.

ART சோதனை

ART சோதனை மூலம் கண்டறியப்பட்ட புதிய நோய்த்தொற்றுகள்: 3,856

அதில் 3,777 பேர் உள்ளூர் மற்றும் 79 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.

வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம்: 0.65

மருத்துவமனைகளில் உள்ளோர் விவரம்

அதே போல, மருத்துவமனையில் 512 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அது தெரிவித்தது.

மேலும், ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில் 64 பேர் இருப்பதாகவும் MOH குறிப்பிட்டுள்ளது.

ICU அவசர சிகிச்சை பிரிவில் 22 பேர் உள்ளனர்.

சிங்கப்பூரில் இனவெறி பிரச்சனை – இந்திய மற்றும் மலாய் மக்களின் கருத்து