சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு கூடுதல் ஏற்பாடு..!

COVID-19: Urgent housing facilities for foreign workers in Singapore
COVID-19: Urgent housing facilities for foreign workers in Singapore (Photo: Instagram/MINDEF)

சிங்கப்பூரில் COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, சுமார் 1,300 வெளிநாட்டு ஊழியர்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்காக Jurong Camp II, Bedok Camp II ஆகிய முகாம்களை சிங்கப்பூர் ஆயுதப் படை ஏற்பாடு செய்துவருகிறது.

தேசிய வளர்ச்சி அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் அங்கு தங்கவைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூர் ஆயுதப் படையின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாத அந்த முகாம்களின் சில பகுதிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு வேளை உணவையும் வெவ்வேறு நேரங்களில் பிரிக்கப்படுவது, ஊழியர்களுக்கும் அங்குள்ள மற்ற ஆயுதப் படை அதிகாரிகளுக்கும் நாள்தோறும் இருமுறை உடல்வெப்பநிலைச் சோதனை ஆகியவைக் செய்யப்படும் என்றும் செய்தி தெரிவித்துள்ளது.