சிங்கப்பூரில் “தடுப்பூசி தகுதி” நிலையை இழந்த Work pass அனுமதி ஊழியர்கள்… எவ்வளவு பேர் தெரியுமா?

Covid-19 vaccine booster lost vaxxed status work pass holders
(Photo: Ngau Kai Yan)

Singapore Work Pass Holders: கடந்த பிப்ரவரி 14 அன்றோடு கோவிட்-19 தடுப்பூசி நிலை காலாவதியான 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுமார் 21,800 பேரின் விவரத்தை சுகாதார அமைச்சர் ஓங் யே குங் இன்று திங்கள்கிழமை (பிப்ரவரி 28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிகளை இன்னும் போட்டுக்கொள்ளாத சிங்கப்பூரர்களில் பெரும்பான்மையானவர்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இரு ஊழியர்களை தூக்கிய போலீஸ் – பரபரப்பான விமான நிலையம்!

இந்த 21,800 நபர்களில் 38 சதவீதம் பேர் Work pass அனுமதியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஆவர்.

வெளிநாட்டினர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததுக்கு காரணங்களைக் கண்டறிய முடியவில்லை என்று கூறிய அவர், ஆனால் பலர் வெளிநாட்டில் உள்ளனர் என்பது தெரிவதாக குறிப்பிட்டார்.

மேலும், 14 சதவீதம் பேர் நிரந்தர வாசிகள் என்றும், மீதமுள்ள 48 சதவீதம் பேர் சிங்கப்பூரர்கள் என்று திரு ஓங் பதிலளித்தார்.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு SHN, Travel History காலம் என்ன? – மேலும் நடப்பில் உள்ளதை அறிவோம்