நான்கில் மூன்று சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடுவதே இலக்கு, எல்லைகளில் கட்டுப்பாடுகளை தளர்த்த ஏற்பாடுகள்

(photo: mothership)

சிங்கப்பூர், அக்டோபர் மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் தனது மக்கள்தொகையில் 75% தொடுப்பூசி செலுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது, இதனால் கொரோனா வைரஸ் காலப்போக்கில் பரவலாக மாறும் என்பதால் எல்லைக் கட்டுப்பாடுகளை படிப்படியாகக் குறைக்க முடியும் என்று வர்த்தக அமைச்சர் கன் கிம் யோங் செவ்வாயன்று சிஎன்பிசிக்கு தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 வரவிருக்கும் காலங்களில் பரவலாக இருக்கும் என்பதால் தடுப்பூசி மிகவும் முக்கியமானது. வைரஸ் மாறுபாட்டை அடையும் போது அதனையும் எதிர் கொள்ளவேண்டி இருக்கும் எனவும் அமைச்சர் கன் தெரிவித்தார்.

சிங்கப்பூர் தனது தேசிய தினத்தை ஆகஸ்ட் 9 அன்று கொண்டாட இருக்கிறது. அதற்குள் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு சதவீதத்தினர்க்கு தடுப்பூசி போடுவதே குறிக்கோள் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரின் 5.6 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 37% ஜூலை 3 ஆம் தேதி வரை முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக விஞ்ஞான வெளியீட்டின் தரவு காட்டுகிறது. இது மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிக சதவீதமாகும்.

சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசி திட்டம் ஃபைசர் மற்றும் மாடர்னாவை பரிந்துரைத்துள்ளது, ஆனால், சில தனியார் கிளினிக்குகள் சீனா தயாரித்த தடுப்பூசியை விரும்புவோருக்கு சினோவாக் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.

“செப்டம்பர் இறுதிக்குள் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் 75% அல்லது அதற்கு மேற்பட்ட (மக்கள்தொகையை) சதவீதத்துக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என நம்புவதாகவும், ஒப்போது எல்லைகளைத் திறப்பதில் ஒரு பெரிய நகர்வை செய்ய முடியும் என்றும், மேலும் பார்வையாளர்கள் தொழில் மற்றும் ஓய்வு சம்மந்தமாக சிங்கப்பூருக்கு வர அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் கன் தெரிவித்தார்.

சிங்கப்பூர் மற்றும் பல இடங்களுக்கு இடையில் பயணிக்க தடுப்பூசி போட்டுக் கொண்டோரை அனுமதித்து சோதனைகளை மேற்கொள்ள நகர-அரசு திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில், இந்த செயல்முறையைச் சோதிக்க சிறிய குழுக்களாக இது செய்யப்படும், அந்த முயற்சிகள் வெற்றிபெற்றால், நாட்டிற்குள் அதிகமான பயணிகளை அனுமதிக்க முடிவுகள் எடுக்கப்படும் என கன் கூறினார்.

சுகாதாரத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், சிங்கப்பூரர்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும் எனவும் ஒருபுறம் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், மறுபுறம் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும் இடையே மிகவும் கவனமாக சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம் என்று அமைச்சர் கன் கூறினார்.