சிங்கப்பூர் வந்த 11 work permit வைத்திருப்பவர்களுக்கு தொற்று

Singapore
(Photo: TODAY)

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி கிருமித்தொற்று பாதிக்கப்பட்ட 17 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் தொடர்ந்து 13வது நாளாக நோய்த்தொற்று பதிவாகவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் லீ மீது அவதூறு வழக்கு.. S$133,000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

இந்தியாவில் இருந்து திரும்பிய நிரந்தரவாசி ஒருவர், நேபாளத்திலிருந்து வந்த சார்பு அனுமதி வைத்திருப்பவர் ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த இரண்டு work pass வைத்திருப்பவர்களும் இதில் அடங்குவர்.

பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வந்த 11 work permit வைத்திருப்பவர்களும் இதில் அடங்குவர், அவர்களில் ஏழு பேர் வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்கள்.

வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் அவர்கள் அனைவரும் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் வைக்கப்பட்டனர் அல்லது சிங்கப்பூர் வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் – ஊழியர்களுக்கு….