வைரஸின் தாக்கம் குறிப்பிடப்படாத நிலை…சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் – எச்சரிக்கும் நாடு

Singapore visa free travel arrangement
Pic: REUTERS/Edgar Su

சிங்கப்பூருக்கான கோவிட்-19 பயண ஆலோசனையை, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் மறுவகைப்படுத்தியுள்ளன.

அதன் படி, சிங்கப்பூருக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க அமெரிக்கர்களுக்கு அந்நாடு வலியுறுத்தியுள்ளது.

வழக்கமான சர்வதேச விமானங்கள் மீண்டும் எப்போது தொடங்கும்?

சிங்கப்பூரில் நோயின் அளவு “unknown” என்னும் குறிப்பிடப்படாத நிலையில் இருப்பதாக அந்நாடு வகைப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் தற்போது குறிப்பிடப்படாத நிலையில் உள்ளதால், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் கூட COVID-19 மாறுபாடு வகைகளால் பாதிக்கப்படுவதற்கும், பரவுவதற்கும் ஆபத்து இருக்கலாம் என்று CDC தனது ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மிக உயர்ந்த கோவிட்-19 ஆபத்து நிலையின் கீழ் வகைப்படுத்தப்பட்ட சிங்கப்பூர், தற்போது ஆப்கானிஸ்தான், வட கொரியா மற்றும் சிரியா போன்ற அதே வகைப்பாட்டு பிரிவின்கீழ் வருகிறது.

VTL அல்லாத வழக்கமான விமானங்களை இயக்கும் “Scoot” – ‘கோவை, திருச்சி’ பயணிகளுக்கு நற்செய்தி