சிங்கப்பூரில் நாளை முதல் இவர்களுக்கெல்லாம் வழக்கமான பரிசோதனை இல்லை..!

Pic: AFP/Roslan Rahman

சிங்கப்பூரில் நாளை (பிப்.18) முதல் சுகாதாரப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, பாலர் பள்ளிகள் போன்ற எளிதில் தொற்று பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் சேவை செய்யும் பணியாளர்களுக்கு மட்டுமே வழக்கமான சோதனையைத் தொடர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட்டில் தங்குமிடங்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு வழக்கமான பரிசோதனை முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், காலப்போக்கில் அதிக ஆபத்துள்ள பணி அமைப்புகளை உள்ளடக்கும் வகையில் அது விரிவுபடுத்தப்பட்டது.

சிங்கப்பூரில் 2வது டோஸ் பூஸ்டர் திட்டம் செயல்படுத்தப்படுமா.? – சுகாதாரத்துறை விளக்கம்.!

சிங்கப்பூரில் நாளை முதல் உணவகங்கள், உணவங்காடி நிலையங்கள் மற்றும் கடைத்தொகுதிகளில் பணிபுரிபவர்களும், விமான நிலைய, துறைமுக எல்லைகளில் வேலை பார்ப்பவர்களும் வழக்கமான COVID-19 பரிசோதனையை செய்துகொள்ள தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

கொரோனா உருமாறிய கிருமியின் தனிப்பட்ட தன்மைகளுக்கு ஏற்ப நடப்பு விதிமுறைகளைத் திருத்தி அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு நடப்புக்கு வருகிறது என சுகாதார அமைச்சர் திரு. ஓங் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

SGD 1000 பணநோட்டை திருப்பி பார்த்தால் இப்படியொரு ஆச்சர்யம் இருக்கா? இன்னும் சிங்கப்பூர் மக்கள் பலருக்கே இது தெரியாது!