கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ள ஊழியர்கள், மாணவர்களின் கவனத்திற்கு…இனி இது தேவையில்லை – MOH அறிவிப்பு.!

Pic: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து இருக்கும் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் தாங்கள் குணமடைந்து இருப்பதை உறுதிப்படுத்தக்கூடிய கடிதம் இல்லாமல் இனி வேலைக்கு அல்லது பள்ளிக்கூடம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து இருப்பதை உறுதிப்படுத்தக்கூடிய கடிதத்தைப் பெறுவதற்காக தனியார் மருந்தகங்களுக்கு லேசான அறிகுறியுடன் அல்லது அறிகுறி இல்லாமல் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய வருகை தேவையற்றது என்றும், இதனால் மற்றவர்களுக்குத் தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்படும் என்றும் கல்வி, சுகாதார மற்றும் மனிதவள அமைச்சகம், இளம்பருவ மேம்பாட்டு முகவை அமைப்பு ஆகியவை கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

கெப்பல் கிளப் நீச்சல் குளத்தில் பெண் மரணம் – மூழ்கி உயிரிழந்தார் என சந்தேகம்

மேலும், கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகள், குணமடைந்ததை உறுதிப்படுத்தக்கூடிய கடிதத்தை மருத்துவரிடமிருந்து பெறவேண்டிய தேவையில்லை எனவும், கடிதம் இல்லாமல் பள்ளிக்கூடம் அல்லது வேலைக்குச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ART பரிசோதனை மூலம் கோவிட்-19 இருப்பதாகத் தெரிந்தால், குறைந்தபட்சம் 72 மணி நேரம் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இது தற்போதைய சுகாதார நடைமுறையாகும். தொற்றிலிருந்து குணமடைந்து ART சோதனையில் தொற்று இல்லை என தெரியவந்தால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை.

வேலைக்கு திரும்பும் ஊழியரிடம் தொற்றிலிருந்து குணமடைந்ததை காட்டும் சான்றிதழைத் தாக்கல் செய்யும்படி முதலாளிகள் கேட்கக்கூடாது என அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கோவிட்-19 தொற்று ஏற்பட்ட அல்லது வீட்டிலேயே இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அல்லது சுகாதார ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் குணமடைந்த பின்னர் மருத்துவரிடம் அதற்கான கடிதத்தைப் பெற வேண்டிய தேவை இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

“வெளிநாட்டு ஊழியர்களால் சிங்கப்பூர் அழகாகிறது” – உணவு பொருட்களை பரிசாக அளித்த சிங்கப்பூர் பெண்