சிங்கப்பூரில் இன்று முதல் சில கட்டுப்பாடுகளுக்கு தளர்வு.!

Pic: Roslan RAHMAN/AFP

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் இன்று (19-08-2021) முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ளூர் கிருமித்தொற்று பரவல் சம்பவங்களின் எண்ணிக்கை நிலையாக இருப்பதால், திட்டமிட்டபடி இரண்டாம் கட்டத் தளர்வு நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் சில கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படவுள்ளன:

  • திருமண உபசரிப்பு நிகழ்ச்சிகள், சமய நடவடிக்கைகள், நேரடிக் கலை நிகழ்ச்சிகள், ஆகியவற்றில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 1,000 பேர் வரை பங்கேற்க அனுமதி.
  • அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரிக்கப்பட்டு, 50 விழுக்காடாக இருக்கும்.
  • கடைத்தொகுதிகள் மற்றும் கடைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
  • பொது இடங்களில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் நடைமுறை இருக்காது.
  • சிங்கப்பூரில் இன்று முதல் 50 சதவீத ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சென்று பணிபுரிய அனுமதி அளிக்கப்படும், பணியிடத்தில் சமூகக் கூட்டங்களுக்கும் அனுமதிக்கப்படும்.

வேலையிடங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு – அலுவலகங்களுக்குத் திரும்பும் ஊழியர்கள்