வேலையிடங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு – அலுவலகங்களுக்குத் திரும்பும் ஊழியர்கள்

Photo: Hr Asia Media

சிங்கப்பூரில் கோவிட் -19 கிருமித்தொற்று சூழல் சீராகி, தடுப்பூசி போட்டுகொண்டோர் விகிதங்கள் உயரும்போது, ​​நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தில் ஊழியர்களை குறிப்பிட்ட அளவு பணியில் அமர்த்தலாம் என்று கூறப்பட்டது.

இதனை அடுத்து, இன்று (ஆக. 19) முதல் 50 சதவிகிதம் வரை ஊழியர்கள் வேலையிடங்களுக்குத் திரும்புகின்றனர்.

கனமழையைத் தொடர்ந்து, வேன் மீது விழுந்த 7 மாடி உயர மரம்…

கிருமித்தொற்று பரவல் காரணமாக, கடந்த மே மாதத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது வழக்கம் ஆக்கப்பட்டது.

படிப்படியாக வேலையிடங்களில் பணிகள் மீண்டும் தொடங்கும் என்றும், கலப்பு வேலை ஏற்பாடுகளை புதிய சூழ்நிலைக்கு ஏற்ப நிறுவனங்கள் சரிசெய்து கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வீடு மற்றும் அலுவலகம் என்று இரு இடங்களிலும் வேலை செய்யும் புதிய ஏற்பாட்டை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் சில நிறுவனங்கள் CNA ஊடகத்திடம் தெரிவித்துள்ளன.

அதே போல, எல்லா நிறுவனங்களும் இந்த உடனடியாக தங்கள் ஊழியர்களை அழைக்க திட்டமிடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

“இந்தியர்களே நாடு திரும்புங்கள், கொரோனாவை பரப்பாதீர்கள்” என்று சாடிய ஆடவருக்கு கடுமையான எச்சரிக்கை