லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட மாடு.. இணையத்தில் கொதித்து எழுந்த இணையவாசிகள்

Cow in back of lorry on PIE draws mixed reactions
Youtube/SG Road Vigilante

மத்திய விரைவுச் சாலையில் சென்ற லாரி ஒன்றின் பின்புறத்தில் மாடு ஏற்றிச்செல்வதை காட்டும் வீடியோ ஆன்லைனில் கலவையான எதிர்மறை கருத்துக்களை பெற்று வருகிறது.

மாடுகளை லாரியில் ஏற்றிச் செல்வதில் இருக்கும் நியதி மற்றும் சட்டப்பூர்வ நெறிமுறைகள் குறித்து சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெளிநாட்டு பணிப்பெண்ணை நாசம் செய்த சிங்கப்பூரருக்கு 15 ஆண்டுகள் சிறை

ஆகஸ்ட் 27 அன்று SG Road Vigilante என்ற Facebook பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில், மத்திய விரைவுச் சாலையில் பயணித்த லாரி ஒன்றின் பின்புறத்தில் மாடு ஏற்றிச் செல்லப்படுவதை காண முடிந்தது.

இதற்கு சில நெட்டிசன்கள் வேடிக்கையாக பதிலளித்தனர், சிலர் விலங்குகளின் நலன் குறித்தும், இவ்வாறு செய்வது சட்டபூர்வமானதா என்பது குறித்தும் சிலர் அக்கறை கொண்டனர்.

வீடியோவில் உள்ள மாடு லிம் சு காங்கில் உள்ள விக்னேஷ் பால் பண்ணைக்கு சொந்தமானது என்று பண்ணையின் செயலாளர் கூறினார், அவர் தனது பெயரை திரு விக்னேஷ் என்று கூறினார்.

இந்து சமய கலாச்சாரத்தின்படி பசுக்கள் புனிதமான விலங்குகளாக பார்க்கப்படும், எனவே வழிபாடு செய்வதற்காக கோவிலுக்கு அதை கொண்டு செல்வதாக திரு விக்னேஷ் கூறினார்.

பசுவின் கழுத்து மற்றும் மூக்கின் வழி தடிமனான கயிறு பாதுகாப்புக்கு இருக்கும், அதனை லாரியில் உள்ள உலோகக் கம்பியில் கட்டி பாதுகாப்பாக கொண்டு செல்வதாக அவர் கூறினார்.

ஓட்டுநர்கள் மற்றும் மாடுகளை பராமரிப்பவர்கள் அதில் நன்கு பயிற்சி பெற்றவர்கள், மேலும் சிறந்த அனுபவம் உள்ளவர்கள் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை, இதனால் மாடுகள் பாதுகாப்பாகக் கையாளப்படுகின்றன என்று திரு விக்னேஷ் கூறினார்.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்குப் பதிலளித்த மூத்த வழக்கறிஞர் அமோலத் சிங், சாலையில் விலங்குகளைக் கொண்டு செல்வதற்கு எந்தச் சட்டமும் இல்லை என்றார்.

இருப்பினும், உயிரோடு உள்ள விலங்குகளை கொண்டு செல்லும்போது அதனை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்துகளும் எழுந்துள்ளன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

ஊழியரின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த முதலாளி.. ஊழியர் படித்த பள்ளிக்கு முதலாளி கொடுத்த சர்ப்ரைஸ் – வியந்துபோன ஊர் மக்கள்