ஊழியரின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த முதலாளி.. ஊழியர் படித்த பள்ளிக்கு முதலாளி கொடுத்த சர்ப்ரைஸ் – வியந்துபோன ஊர் மக்கள்

ஊழியரின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த முதலாளி.. ஊழியர் படித்த பள்ளிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் - வியந்துபோன ஊர் மக்கள்
Photo: Tamil media

சிங்கப்பூரில் பணிபுரியும் புதுக்கோட்டையை சேர்ந்த ஊழியர் ஒருவரின் திருமணத்துக்காக அவரின் முதலாளி தமிழ்நாட்டுக்கு வருகை தந்து சிறப்பித்தார்.

ஜெயபிரகாஷ் என்ற ஊழியர் புதுக்கோட்டை அருகே உள்ள அம்மங்குடி கிராமத்தை சேர்ந்தவர். இவர் சிங்கப்பூரில் 7 ஆண்டுகளாக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

பைன்டர் வேலைக்காக சென்ற ஊழியர்… தவறுதலான வேலையில் விடப்பட்டதால் போலீசில் சிக்கினார்

இந்நிலையில், நேற்று செப்.04 ஆம் தேதி ஜெயபிரகாஷ்க்கும் அதே கிராமத்தை சேர்ந்த அன்புகனி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்துக்கு அவரின் சிங்கப்பூர் முதலாளி டொமினிக் ஆங் பாவ் லெங் மற்றும் அவரின் குடும்பத்தினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து விழாவில் பங்கேற்று, மணமக்களை மனநிறைவோடு வாழ்த்தி மகிழ்ந்தனர்.

மேலும் அவர்களுக்கு தாரைதப்பட்டை தெறிக்க மாலையுடன் மரியாதையும் வழங்கப்பட்டது.

அதோடு மட்டும் இருந்துவிடாமல், ஜெயபிரகாஷ் படித்த சின்னஅம்மங்குடி ஊராட்சி பள்ளிக்கு சென்ற முதலாளி டொமினிக், மாணவர்களை வியப்பில் ஆழ்த்தும் விதமாக சுமார் நான்கு லட்சம் மதிப்பில் பொருட்களை வாரி வழங்கினார்.

அதில் மடிக்கணினி, ப்ரொஜெக்டர் சாதனம், ஸ்கிரீன்கள் மேலும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருந்தது.

மேலும் மாணவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட முதலாளி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தும் சிறப்பித்தார்.

இந்த நிகழ்வு அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுத்தந்தது.

சிங்கப்பூர் முதலாளி மற்றும் அவரின் குடும்பத்தினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

இன, மதம் இடையே பகைமையை தூண்டும் கருத்துக்கள்.. சுபாஸ் நாயருக்கு சிறை