லாரி மோதிய விபத்து: 27 வயதுடைய ஆடவர் சம்பவ இடத்திலேயே மரணம்

crash truck accident death
Shin Min Daily News

மத்திய விரைவுச் சாலையில் (CTE) லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

விரைவுச் சாலையின் மையப் பாதையில் பல போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதையும், அருகில் நீல நிற கூடாரம் இருப்பதையும் காட்டும் வீடியோவை ஸ்டாம்ப் பகிர்ந்துள்ளது.

சிங்கப்பூரருடன் போலியான திருமணம் – கூடுதல் காலம் சிங்கப்பூரில் தங்குவதற்கு திட்டம்: சிக்கியவருக்கு சிறை

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 20) காலை 6.25 மணியளவில் மத்திய விரைவுச் சாலையில் சிலேத்தர் விரைவுச் சாலையை நோக்கி செல்லும் வழியில் நடந்த இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 27 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 57 வயதுடைய லாரி ஓட்டுநர் போலீஸ் விசாரணையில் உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்: ஒருவர் மரணம் – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள்