சிங்கப்பூரில் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கான கடன் வரும் மாதங்களில் உயரும்..!

Credit card debt jobs salaries
(PHOTO: Pixabay)

COVID-19 தொற்று காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கான கடன் வரும் மாதங்களில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொற்றுநோயால் ஏற்படும் சம்பள குறைப்பு மற்றும் வேலை இழப்புகள் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் கிரெடிட் கார்டு வைத்துள்ளோரின் கடன் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் சில வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தொற்று இல்லை..!

இந்த ஆண்டு இறுதியில் நாடு தழுவிய கடன் நிவாரணத் திட்டம் காலாவதியாகும் நிலையில், நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் 1,300க்கும் அதிகமானோர் கடன் ஆலோசனை சிங்கப்பூர் அமைப்பிடம் முதல்முறையாக உதவி கேட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது கடந்த 2016ஆம் ஆண்டில் 2,200க்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது சமீபத்தில் மிகக் குறைவான எண்ணிக்கை ஆகும்.

இந்த இக்கட்டான கிருமிருத்தொற்று காலக்கட்டத்தில் பொருளாதார மந்தநிலையை சமாளிக்க சிறப்பு நிதி நிவாரண திட்டம் போன்ற திட்டங்கள் உதவியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தத் திட்டத்தின் மூலம், இந்த சூழலில் வருமானம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பற்ற கடன்களுக்கு குறைவான வட்டி விகிதம் கோரலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் இருந்து திரும்பிய வேலை அனுமதி உடையோர் பாதிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…