சிங்கப்பூரில் மேலும் சில வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தொற்று இல்லை..!

Foreign workers Dormitories Cluster
(Photo: TODAY)

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, தங்கும் விடுதி குடியிருப்பாளர்களிடையே ஏழு கிருமித்தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டன என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இவற்றில், நான்கு பேர் முந்தைய சம்பவங்களுடன் தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டனர், மேலும் தொற்று பரவுவதைத் தடுக்க ஏற்கனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க : இந்தியாவில் இருந்து திரும்பிய வேலை அனுமதி உடையோர் பாதிப்பு..!

மீதமுள்ள மூன்று பேர் கண்காணிப்பு சோதனை மூலம் கண்டறியப்பட்டனர், அதாவது தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படும் வழக்கமான சோதனை மூலம் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

மேலும் தங்கும் விடுதிகளில் முன்பு உள்ள நோய்பரவல் குழுமங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் 80 Tanah Merah Coast ரோட்டில் உள்ள சாங்கி லாட்ஜ் II மற்றும் 35 கியான் டெக் வே மற்றும் 66 டெக் பார்க் கிரஸண்ட் ஆகியவற்றில் உள்ள தங்கும் விடுதிகளில் மேலும் பாதிப்புகள் எதுவும் இல்லை என்பதால், தற்போது அவை தொற்று குழுமங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

மேலும் 26 பேர் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையும் சேர்த்து சிங்கப்பூரில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57,393ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் குடியிருப்பு முகவரி மாற்றம் சேவை தற்போது ஆன்லைனில்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…