காகத்துடன் நட்புறவாடும் மனிதர்…தினமும் அவரின் பிளாட்டுக்கு வந்துபோகும் அதிசய நிகழ்வு – சிங்கப்பூர் வைரல் வீடியோ

காகங்கள் புத்திசாலித்தனம் மற்றும் விசுவாசம் கொண்டவை என்பதை நாம் கேள்வி பட்டிருப்போம். அதை உண்மை என நிரூபிக்கும் விதமாக, சிங்கப்பூரில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு காகம் தினமும் வந்து செல்கிறது.

அந்த ஆடவரின் பிளாட்டுக்கு வழக்கமாக வரும் காகத்தை, ​​அதன் முதுகில் செல்லமாக தடவி கொடுத்து வீடியோ ஒன்றையும் எடுத்து அதை அவர் நம்முடன் பகிர்ந்துள்ளார்.

லேப்டாப் வாங்க வசதியில்லா வெளிநாட்டு ஊழியர்: நன்கொடை செய்த IRR அமைப்பு… இரட்டை சம்பளத்தில் வேலை பெற்று அசத்தல்

நட்புறவாக பழகும் இந்த கருப்புப் பறவையின் காணொளி நேற்று ஜன. 13ல் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இது குறித்த அவர் கூறுகையில்; கடந்த சில மாதங்களாக மதிய வேளையில் இந்த இளம் காகம் அவரை காண பிளாட்டிற்கு வருவதாக கூறியுள்ளார்.

அவர் அதற்கு முன்னதாக, பறவைக்கு கொஞ்சம் ரொட்டி மற்றும் வேர்க்கடலை கொடுத்துள்ளார், அதை தொடர்ந்து இது வழக்கமாக அங்கு வந்து செல்கிறது.

அந்த ஆடவர் காகத்தின் தலை, முதுகு மற்றும் அலகு ஆகியவற்றை அழகாக தடவி கொடுக்க அது அமைதியாக ரெஸ்ட் எடுக்கிறது என்பது தான் ஆச்சரியமான விஷயம்.

எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் 12வது மாடியில் வேலை பார்க்கும் ஊழியர்: “விழுந்தால் என்ன ஆவது”- நெட்டிசன்கள் கவலை