வேன் கவிழ்ந்து விபத்து: ஓட்டுனரை காணவில்லை – போலீசார் விசாரணை

missing-driver
Stomp

மத்திய விரைவுச்சாலையில் (CTE) புத்தாண்டு தினத்தின் (ஜனவரி 1) அதிகாலையில் வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆனால், போலீசார் வந்து பார்த்தபோது ஓட்டுநர் அந்த இடத்தில் காணப்படவில்லை.

‘ஹே கத்தியை எடு’… என்று லிட்டில் இந்தியாவில் அடித்துக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் 3 பேர் கைது

அதிகாலை 4.35 மணியளவில் Ayer Rajah Expressway (AYE) நோக்கி CTEயில் விபத்தில் சிக்கியதாக நம்பப்படும் வேன் கவிழ்ந்தது குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் வரும் போது ஓட்டுநர் சம்பவ இடத்தில் இல்லை என்றும் போலீசார் கூறினர்.

பின்னர், வேனில் சோதனை நடத்தியதில் சந்தேகத்திற்கு இடமான எதுவும் வேனில் சிக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பேஸ்புக்கில் வெளியான வீடியோவில், K-9 Unit, போலீஸ் வாகனங்கள், அமலாக்க அதிகாரிகள் மற்றும் இழுவை வண்டிகள் சம்பவ இடத்தில் இருப்பதைக் காணமுடிகிறது.

இனி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே விமான சேவை – இந்திய மாநிலம் அதிரடி உத்தரவு