சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்ட பெண் பயணி….ரூபாய் 39 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்ட பெண் பயணி....ரூபாய் 39 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
Photo: Trichy Customs

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, ஏர் ஏசியா, ஸ்கூட், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமான சேவைகளை வழங்கி வருகின்றனர்.

கட்டுமான ஊழியரை படுத்த படுக்கையாக போட்ட கோர சம்பவம் – நிறுவனத்தின் இயக்குனர் மீது பாய்ந்த சட்டம்

துபாய், சிங்கப்பூர், மலேசியா, அபுதாபி, ஷார்ஜா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகளை விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், அவ்வப்போது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உடமைகளையும், பயணிகளையும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.08) மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் அஞ்சல்களுக்கான கட்டணத்தை உயர்த்துகிறது சிங்போஸ்ட்!

அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பெண் பயணியை தனியே அழைத்துச் சென்று பெண் அதிகாரிகள் சோதனை செய்ததில் 24 கேரட் 274 கிராம் எடைக்கொண்ட தங்கக்கட்டியை உடலில் மறைத்து வைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது கைப்பையில் சோதனை நடத்தியதில், 24 கேரட் ஆபரணத்தங்க செயின்கள், 22 கேரட் ஆபரணத்தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது.

சுமார் 624 கிராம் எடைக்கொண்ட கடத்தல் தங்கத்தைப் பறித்தல் செய்த அதிகாரிகள், அந்த பெண் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 39.10 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.