கட்டுமான ஊழியரை படுத்த படுக்கையாக போட்ட கோர சம்பவம் – நிறுவனத்தின் இயக்குனர் மீது பாய்ந்த சட்டம்

migrant worker jailed in singapore
(Photo: wsatlaw)

சிங்கப்பூரில் கட்டுமான ஊழியர் படுத்த படுக்கையாக கிடப்பதற்கு காரணமாக இருந்த நிறுவனத்தின் இயக்குனர் ஒருவருக்கு 22 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலையிடத்தில் காணப்பட்ட பல பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஊழியருக்கு கடுமையான காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் விசா இல்லாமல் பயணிக்கும் புதிய உடன்பாடு – 2024இல் நடப்புக்கு வரும்

கட்டுமான நிறுவனமான Ossis இன் ஒரே இயக்குநரான Denny Nasution Chng என்பவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலையிடத்தில் சிறந்த பாதுகாப்பு மற்றும் சுகாதார கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்துவதற்கு முழு பொறுப்பு Chng தான் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (டிச. 7) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

ஆனால், அதனை அவர் செய்ய தவறியதால் ஊழியருக்கு கடும் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று, இரண்டு ஊழியர்கள் கட்டடத்தின் இரண்டாவது மாடியின் சுவரில் உள்ள விரிசல்களுக்கு வெள்ளை பூச்சு பூசும் வேலையை செய்து கொண்டிருந்தனர்.

மதியம் 2 மணியளவில் பூச்சு பூசுவதை முடித்துவிட்டு, அது உலரும் வரை அவர்கள் தற்காலிகமாக வேலையை நிறுத்தி காத்திருந்தனர்.

அப்போது ஒருவர் மட்டும் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் கடைக்கு சென்றுள்ளார், பின்னர் 15 நிமிடம் கழித்து வந்து பார்த்தபோது முதல் தளத்தில் சக ஊழியர் குப்புறக்கிடந்துள்ளார்.

பின்னர் அந்த ஊழியர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கடுமையான மூளைக் காயம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அவர் படுத்த படுக்கையில் இருப்பதாகவும், பேசவும் முடியவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதனை அடுத்து MOM நடத்திய விசாரணையில், Ossis பல வேலையிட பாதுகாப்பு விதிகளை மீறியது தெரியவந்தது.

சிங்கப்பூரின் விசா இல்லாமல் பயணிக்கும் புதிய உடன்பாடு – 2024இல் நடப்புக்கு வரும்

சிங்கப்பூரில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 80% வரை மாபெரும் தள்ளுபடி விற்பனை: டிச.8 – டிச.10 வரை – முந்துங்கள்