சிங்கப்பூரில் சட்ட விரோத செயல் – வெளிநாட்டை சேர்ந்த ஆடவர் கைது

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

ஆறு AC இயந்திரத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,500க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட் அட்டைப்பெட்டிகள் சிங்கப்பூர் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

செம்பவாங்கில் உள்ள காம்பஸ் கிரசண்ட் (Gambas Crescent) அருகே நடந்த அதிரடி சோதனை நடவடிக்கையின் போது 39 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை புதன்கிழமை (டிசம்பர் 15) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகமான “ஒர்க் பெர்மிட்” ஊழியர்கள் வேலையை விட்டு சென்றதால், கட்டுமான துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு!

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி, சீன நாட்டவர், கிடங்கில் இருந்து பொருட்களை சேகரித்து சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட லாரியில் ஏற்றுவதை சுங்க அதிகாரிகள் கவனித்தனர்.

பின்னர் அதிகாரிகள் சோதனை நடத்தியத்தில், குளிரூட்டும் இயந்திரத்திற்குள் 1,512 கார்டன்கள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதில் S$129,280 வெள்ளி வரி ஏய்ப்பும் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) S$10,370 வெள்ளி ஏய்ப்பும் செய்யப்பட்டுள்ளது.

சிகரெட் பாக்கெட்டுகள், அட்டைப்பெட்டிகள், லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த நபருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்து வருவதாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் மிகவும் அதிகரித்த வேலை காலியிடங்கள் – வெளிநாட்டு ஊழியர்களுக்கான எல்லைக் கட்டுப்பாடுகள் காரணம்