“ரெட் லைட்” சிக்னலை மதிக்காமல் சென்ற ஓட்டுநர் – கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த எதிர்மறை விளைவு (காணொளி)

cyclist-beat-red-light accident

அங் மோ கியோ அவென்யூ 1ல் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர், ரெட் லைட் சிக்னலை மதிக்காமல் சென்றதன் விளைவாக விபத்தில் சிக்கினார்.

சிக்னலை கடந்து சென்ற அடுத்த சந்திப்பில் மற்றொரு சைக்கிள் மீது மோதி அவர் விபத்துக்குள்ளானார். இச்சம்பவம் டிசம்பர் 19 அன்று இரவு 7 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் வரும் பயணியா நீங்க?? – அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்!

கார் முகப்பு கேமரா மூலம் எடுக்கப்பட்ட காணொளி, நேற்று டிசம்பர் 30 அன்று SG Road Vigilante என்ற பேஸ்புக் குழுவில் பதிவேற்றப்பட்டது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அந்த பதிவில், பல இணையவாசிகள் தங்களின் கருத்துக்களை கூறினர்.

சைக்கிள் ஓட்டுபவர்களின் ஆபத்தை பற்றியும், அவர்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதது பற்றியும் பலர் கருத்துத் தெரிவித்தனர்.

சாலை விதிகளுக்கு கட்டுப்படாமல் தவறிழைக்கும் சைக்கிள் ஓட்டிகளுக்கு ஜனவரி 1, 2022 முதல் S$150 அபராதம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தினசரி விமானங்களை இயக்க உள்ள SIA – ஆனால் இவர்கள் மட்டும் தான் செல்ல முடியும்!