“தினசரி கொரோனா பாதிப்பு விரைவில் 1,000- யை எட்டக்கூடும்”- சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

File Photo: Health Minister Ong Ye Kung

 

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிங்கப்பூரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 88%- க்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்த அமைச்சர் கா.சண்முகம்!

சிங்கப்பூரர்கள், நிரந்தர வாசிகளுக்கு மட்டுமின்றி, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிநாட்டினர்கள் உள்பட சிங்கப்பூரில் வசிக்கும் அனைவரும் கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது. குறிப்பாக, முதியவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று எளிதில் பரவ வாய்ப்பிருப்பதால், அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வீட்டில் இருந்து வெளியே வர முடியாத முதியவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டிருந்தாலும் கூட, முகக்கவசம் அணிதல்; பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல்; கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆகஸ்ட்டில் எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதியில் மெதுவான வளர்ச்சி!

இந்நிலையில், சிங்கப்பூரில் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்று (17/09/2021) செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ காங், “சிங்கப்பூரில் ஒவ்வொரு வாரமும் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகிக் கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விரைவில் 1,000- யை எட்டக்கூடும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பது எதிர்பாராத ஒன்றல்ல. புதிய கொரோனா நோய் பரவல் தொடங்கிய 4 முதல் 8 வாரங்களுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் தான் அது உச்சத்தைத் தொடும். எனினும், மற்ற நாடுகளைக் காட்டிலும், சிங்கப்பூர் தற்போது எதிர்நோக்கும் நிலைமை வேறுபட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாத 72 வயது மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், கடுமையாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கைத் தொடர்ந்து குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.