DBS வங்கியில் 3 போலி S$10,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற சம்பவம் – சுதாகரித்துக் கொண்ட ஊழியர்

MAS

போலியான சிங்கப்பூர் பண நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

66 மற்றும் 39 வயதுடைய இருவர் போலியான பண நோட்டுகளை வைத்திருந்தது மற்றும் அவற்றைப் பயன்படுத்த சதியில் ஈடுபட்டது ஆகியவை தொடர்பாக கடந்த மார்ச் 24, 2022 அன்று குற்றம் சாட்டப்பட்டது.

சிங்கப்பூரில் 20 ஆண்டுகள் கடும் உழைப்பு.. கட்டுமான ஊழியராக வந்தவர், இன்று 7 கடைகளுக்கு முதலாளி – பிரம்மிக்க வைக்கும் தமிழரின் வாழ்க்கை

கடந்த மார்ச் 22 அன்று, காலை 11 மணியளவில், பிளாசா சிங்கபுரா DBS வங்கிக்கு இருவரும் சென்றுள்ளனர். பின்னர் 66 வயதான ஆடவர், மூன்று S$10,000 நோட்டுகளையும், S$1,000 நோட்டையும் வங்கியில் அளித்ததாகக் கூறப்படுகிறது.

அதாவது அவர் தன்னுடைய நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் அதனை டெபாசிட் செய்ய முயன்றுள்ளார்.

இருப்பினும், வங்கி அதிகாரிக்கு S$10,000 நோட்டுகள் போலியானவை என்று சந்தேகம் வர, S$1,000 நோட்டை மட்டுமே வரவு வைத்தார் அவர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, அதன் பின்னர் முதற்கட்ட விசாரணைக்கு பிறகு இருவரையும் போலீசார் கைது செய்தனர். அதில் மொத்தம் ஐந்து போலி S$10,000 நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முதியவரின் வீடு, இன்னொருவரின் ஹோட்டல் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், போலியானதாக நம்பப்படும் சில ஆவணங்களையும் கைப்பற்றினர்.

துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த 3 வெளிநாட்டு ஊழியர்கள்… விதிகள் மீறப்பட்டது தான் காரணம் – அறிக்கை