டிசம்பர்- 23 ஆம் தேதி அன்று ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் (Sri Srinivasa Perumal Temple). இக்கோயிலானது 397 செராங்கூன் சாலையில் (397 Serangoon Road) அமைந்துள்ளது. நாள்தோறும் 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

உங்களுடைய சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளை நன்கொடையாக வழங்கலாம்!

இந்த நிலையில், வரும் டிசம்பர் 23- ஆம் தேதி அன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி (Sri Anjanayer Jayanthi), ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை செலுத்தி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறப்பு வடைமாலை செலுத்தி அர்ச்சனை செலுத்த விரும்பும் பக்தர்கள், அதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வரும் டிசம்பர் 23- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் காலை 11:30 மணி வரை மற்றும் மாலை 06:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை வாங்கிக் கொள்ளலாம்.

டிசம்பர் 23- ஆம் தேதி அன்று காலை 06.30 மணிக்கு ஹோமம் மற்றும் திருமஞ்சனமும், காலை 08.00 மணிக்கு நித்திய பூஜையும், இரவு 07.30 மணிக்கு உபய பூஜையும், இரவு 08.00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு 08.30 மணிக்கு பிரசாதங்கள் விநியோகிக்கப்படும்.

உன்னை நீயே அறைந்துகொள்! – 63 வயது மூதாட்டியின் இரக்கமற்ற செயலினால் காயமடைந்த பணிப்பெண்!

இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தின் 62985771 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.