சிங்கப்பூரில் களைக்கட்டிய தீபாவளி கொண்டாட்டங்கள்!

சிங்கப்பூரில் களைக்கட்டிய தீபாவளி கொண்டாட்டங்கள்!
Photo: LISHA

 

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதிகளில் உள்ள சாலைகள் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பலரும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர். அதேபோல், லிஷா ஏற்பாட்டின் பேரில் நாள்தோறும் பல்வேறு போட்டிகளுக்கும் நடத்தப்பட்டு வருகின்றனர்.

“மாணவனின் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை” – உறுதிப்படுத்தியது MOH

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ள நிலையில், நிலப் போக்குவரத்து ஆணையமும், லிஷாவும் (LISHA), எஸ்பிஎஸ் டிரான்ஸிட் (SBS Transit), எஸ்எம்ஆர்டி, (SMRT) டவர் டிரான்ஸிட் (Tower Transit Singapore) சிங்கப்பூர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, எம்ஆர்டி ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் ‘தீபாவளி வாழ்த்துகள்” என்று கூறி வண்ணமயமான ஓவியங்கள் மற்றும் ரங்கோலி கோலங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

சிங்கப்பூரில் களைக்கட்டிய தீபாவளி கொண்டாட்டங்கள்!
Photo: LISHA

இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. குறிப்பாக, ரயில் நிலையங்களில் உள்ள எஸ்கலேட்டர்களில் தீபாவளி வண்ணமயமான ஓவியங்கள் இடம் பெற்றுள்ளது. அக்டோபர் 16- ஆம் தேதி முதல் நவம்பர் 26- ஆம் தேதி வரை தீபாவளி அலங்காரங்களை பேருந்துகள், ரயில்களில் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ பாயோ விபத்து.. ஆண், பெண் இருவர் கைது

சிங்கப்பூரில் களைக்கட்டிய தீபாவளி கொண்டாட்டங்கள்!
Photo: LISHA

குறிப்பாக, 106, 147, 166, 67, 960 ஆகிய பேருந்துகளில் வண்ணமயமான ஓவியங்கள் தீட்டப்பட்டு, தீபாவளி அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் லிட்டில் இந்தியா, பெடோக் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.