“மாணவனின் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை” – உறுதிப்படுத்தியது MOH

student death Moh says truth
MOH and SSP

சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி (SSP) மாணவர் ஒருவர் சமீபத்தில் இறந்தது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந்நிலையில், அவர் கோவிட்-19 தடுப்பூசி காரணமாக இறந்தார் என்ற வதந்தி பரவிய நிலையில் அது உண்மை இல்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களே சலுகையை பயன்படுத்துங்க.. இனி வெறும் S$15 செலுத்தி இந்த சேவையை பெறலாம்!

அவரின் மரணத்தை தடுப்பூசியோடு தொடர்பு படுத்துவது உண்மைக்கு புறம்பானது என்றும், மேலும் பொறுப்பற்ற செயல் என்று MOH கூறியது.

14 வயதுமிக்க ப்ரனவ் மதய்க் என்ற அந்த மாணவர் Pfizer-BioNTech – Comirnaty COVID-19 தடுப்பூசி மருந்தை கடைசியாக 18 மாதங்களுக்கு முன்பு போட்டுக்கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது.

400 மீட்டர் ஓட்டத்தில் பயிற்சியை முடித்த பிறகு அவரின் உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்பட்டது.

இதனை அடுத்து கடந்த அக். 5 அன்று ப்ரனவ் மதய்க் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதை SSP உறுதிப்படுத்தியது.

பின்னர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (NUH) கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு மரணித்தார்.

அவருக்கு இதய ரத்த குழாய்களில் பிறவிலேயே குறைபாடு இருந்ததாகவும், அதோடு இதயச் செயலிழப்பு காரணமாக அவர் இறந்ததாகவும் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி தெரிவித்துள்ளது.

பூப்பந்து ஆட்டத்தில் சிறந்து விளங்கிய 14 வயது இந்திய வம்சாவளி மாணவர்.. உடற்தகுதி பயிற்சிக்கு பிறகு மரணம்

கட்டுமான தளத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு போர்க்கால வெடிகுண்டு.. கட்டுமான ஊழியர்கள் வெளியேற்றம்