பூப்பந்து ஆட்டத்தில் சிறந்து விளங்கிய 14 வயது இந்திய வம்சாவளி மாணவர்.. உடற்தகுதி பயிற்சிக்கு பிறகு மரணம்

Sports School student dies
Photo: Singapore Sports School's Facebook

உடற்தகுதி பயிற்சிக்கு பிறகு 14 வயதுடைய சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி (SSP) மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

400 மீட்டர் ஓட்டத்தில் பயிற்சியை முடித்த பிறகு அவரின் உடல்நிலை சரியில்லாமல் போனதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

ரயில் நிலைய ஊழியரோடு சண்டை.. வெளிநாட்டு ஊழியருக்கு அபாரதம், சிறை

இதனை அடுத்து, கடந்த அக். 5 அன்று ப்ரனவ் மதய்க் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதை SSP உறுதிப்படுத்தியது.

அதாவது, அக்டோபர் 5 ஆம் தேதி மாலை 6:50 மணியளவில் பள்ளியில் இருந்து உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.

பின்னர் அவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (NUH) கொண்டு செல்லப்பட்டார். பிறகு அவர் மரணித்தார்.

அவர் பள்ளியின் பூப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மாணவனின் இறப்பு மிகுந்த வருத்தமடைய செய்துள்ளதாகவும், சம்பவம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்வதாகவும் SSP கூறியுள்ளது.

மேலும், பாதுகாப்பு நெறிமுறைகளை ஆய்வு செய்து, முறையான தகவலை பெற்றோருக்கு அறிவிப்போம் என்றும் அது குறிப்பிட்டது.

10வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்..