கட்டுமான தளத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு போர்க்கால வெடிகுண்டு.. கட்டுமான ஊழியர்கள் வெளியேற்றம்

Another war relic found near Chapel Road
Tan See Leng/Facebook

சிங்கப்பூர் சேப்பல் சாலைக்கு அருகில் மற்றொரு போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, கட்டுமான ஊழியர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக சொல்லப்பட்டது.

“கைப்படாத பிரெஷ் உணவு, தயங்காம எடுத்துக்கோங்க” – உணவை வீணாக்காமல் பெஞ்சில் வைத்துச்சென்ற ஊழியர்

அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று (அக்.13) பேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளார்.

இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை சிங்கப்பூர் ஆயுதப் படையின் (SAF) வெடிகுண்டு அகற்றும் குழு உறுதி செய்ததாக அவர் சொன்னார்.

மேலும் சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) அதை பாதுகாப்பாக அகற்றியதாகவும் டான் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கையின்போது ஒத்துழைப்பு கொடுத்த அப்பகுதி மக்களுக்கு அவர் நன்றியை தெரிவித்து கொண்டார்.

கடந்த மாதம் தான் அப்பர் புக்கிட் தீமா பகுதியில் இரண்டாம் உலகப்போர் கால வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிகரமாக தகர்த்தப்பட்ட 2ம் உலகப் போர் வெடிகுண்டு: “பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லவேண்டாம்” – போலீஸ்

ஒர்க் பெர்மிட் நிபந்தனைகளை மீறி.. போலீசை தகாத வார்த்தைகள் பேசி வீடியோ வெளியிட்டு சிக்கிய வெளிநாட்டவர்