“கைப்படாத பிரெஷ் உணவு, தயங்காம எடுத்துக்கோங்க” – உணவை வீணாக்காமல் பெஞ்சில் வைத்துச்சென்ற ஊழியர்

free food worker Punggol public bench
Photo: Stomp

பொங்கோலில் பொது இருக்கை ஒன்றில் உணவு தேவையுள்ளோருக்காக இலவச உணவு வைக்கப்பட்டது பெரும் பாராட்டை பெற்றுவருகிறது.

ஸ்டாம்ப் வாசகரான ஃபர்ஹான் என்பவர் கடந்த வியாழக்கிழமை (அக். 12) நள்ளிரவு வேலை முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

ஒர்க் பெர்மிட் நிபந்தனைகளை மீறி.. போலீசை தகாத வார்த்தைகள் பேசி வீடியோ வெளியிட்டு சிக்கிய வெளிநாட்டவர்

அப்போது ​​புங்கோலில் பொதுஇடத்தில் உள்ள ஒரு பெஞ்சில் உணவு அடங்கிய பையை அவர் கண்டார்.

என்ன இது என்று அவர் சென்றுபார்த்தபோது, பையில் சாப்பாடு இருந்துள்ளது, குறிப்பாக உணவு பிரெஷ் ஆகவும் சூடாகவும் இருந்தது என்றார்.

அதில், கைப்படாத சுத்தமான உணவு என்றும் தவறாக டெலிவரி செய்யப்பட்டது என்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

உணவு விநியோகம் செய்யும் ஊழியரால் வாடிக்கையாளரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அதில் எழுதப்பட்டு இருந்தது என்று அவர் கூறினார்.

மேலும், “தயவுசெய்து தயக்கம் காட்டாமல் இதை இலவசமாக எடுத்துக்கொள்ளுங்கள்” என்றும் அதில் எழுதி இருந்தது.

வேலை காரணமாக ஃபர்ஹான் சரியாக சாப்பிடவில்லை, எனவே அதை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தார்.

“அந்த உணவுப் பையில் சாதம், மீன், சிப்ஸ், பொரியலுடன் சிக்கன் சாப் மற்றும் சிக்கன் சாலட் இருந்தது,” என்று அவர் கூறினார்.

“ஊழியர் நல்ல உள்ளம் கொண்டவர் என்றும் அவர் உணவை வீணாக்கவில்லை” என்றும் ஃபர்ஹான் குறிப்பிட்டார்.

மேலும், “உணவை வைத்தவர் யார் என்பதை நான் அறிய விரும்புகிறேன், ஏனென்றால் அது உண்மையிலேயே எனது நாளை மகிழ்ச்சியாக மாற்றியது” என்றும் அவர் பாராட்டினார்.

“மீனை உண்ணும் மீன்” – மிகவும் அரிதான புகைப்படத்தை எடுத்து சர்வதேச விருதை வென்ற சிங்கப்பூரர்!