தீபாவளித் திருநாள்- ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெறும் என அறிவிப்பு!

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் திருவிளக்கு நடைபெறும் என அறிவிப்பு!
Photo: Sri Senpaga Vinayagar Temple

 

சிங்கப்பூரின் எண் 19 சிலோன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் நவம்பர் 12- ஆம் தேதி தீபாவளித் திருநாள் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்களே, பொதுமக்களே இத ஒருபோதும் செய்யாதீங்க – உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

அதன்படி, நவம்பர் 12- ஆம் தேதி ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் காலை 05.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும், காலை 05.45 மணிக்கு ஸ்ரீ செண்பக விநாயகருக்கு ஸ்நபன அபிஷேகமும், காலை 07.00 மணிக்கு மூலவருக்கு விஷேச பூஜையும், காலை 07.30 மணிக்கு அடியார்கள் பங்குபெறும் விஷேச அர்ச்சனையும், காலை 09.30 மணிக்கு வசந்தமண்ட விஷேச பூஜையும், காலை 10.15 மணிக்கு மனோன்மணி அம்பாள் சமேத ஸ்ரீ சதாசிவப் பெருமாள் கைலாச வாகனத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து திருக்காட்சியருளுவார் நிகழ்வும், அதைத் தொடர்ந்து, மதியம் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடும் நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் – காலை இழக்கும் நிலையில் இருந்த ஊழியருக்கு உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூரர்கள்!

தீபாவளித் திருநாள் சிறப்புப் பூஜையில் அனைவரும் கலந்து கொண்டு, விநாயகரின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.