கடும் நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் – காலை இழக்கும் நிலையில் இருந்த ஊழியருக்கு உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூரர்கள்!

Amjath khan

Indian worker Singapore helping treatment: தேவையான நேரத்தில் சிங்கப்பூரர்கள் செய்த உதவியால் தன்னுடைய கால் காப்பற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த 42 வயதுமிக்க அம்ஜத் கான் பாஷா என்ற ஊழியர் தற்போது குணமடைந்து வருவதாக தமிழ் முரசு கூறியுள்ளது.

முதலாளியிடம் பணத்தைத் திருடிய ஊழியர்.. வெளிநாட்டுக்கு தப்பிக்க முயற்சி – வளைத்து பிடித்த போலீஸ்

28 வயதில் சிங்கப்பூரில் வேலை

தனது 28 ஆம் வயதில் கலர்நெட் என்ற நிறுவனத்தில் வேலைக்கு வந்தார் அம்ஜத். அவரின் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 9 குடும்ப உறுப்பினர்களை அவர் கவனித்து வந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா சென்று பின்னர் சிங்கப்பூர் திரும்பிய அம்ஜத்துக்கு காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

கீல்வாதம்

பின்னர் மருத்துவரை நாடிய அவருக்கு Gout என்னும் கீல்வாதம் இருப்பதாக மருந்துகள் வழங்கப்பட்டன. ஆனால் அவருக்கு எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.

பின்னர் கடுமையாக உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், அவர் சாங்கி பொதுமருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அங்கு ஒரு மாத காலம் சிகிச்சை பெற்றுவந்துள்ளார் அவர்.

கடும் நாயால் பாதிப்பு

பின்னர் மருத்துவர்கள் சோதித்ததில் Necrotizing Fasciitis என்னும் சதை உண்ணும் பாக்ட்ரியா கிருமியால் அவர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

அது பரவாமல் இருக்க வேண்டும் என்றால் கால் அகற்றப்பட வேண்டும் என கூறப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நல்வாய்ப்பாக அந்த பாக்டிரியா பரவாத காரணத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் அகற்றிவிட்டு அதற்கு பதிலாக பிளாஸ்டிக் சிகிச்சை செய்யவேண்டும் என கூறியுள்ளனர்.

பிளாஸ்டிக் சிகிச்சை தேவை

சிங்கப்பூரில் அவருக்கு மேல்சிகிச்சை செய்ய வாரம் S$29,000 வெள்ளி தேவை என்ற நிலையில், அவருக்கு நிறுவனம் எடுத்த மருத்துவ காப்பீடு மூலம் S$15,000 வெள்ளி மட்டுமே இருந்தது.

இந்நிலையில், சொந்த ஊருக்கு சென்று தன் மருத்துவ மேல்சிகிச்சையை பார்த்துக்கொள்ள அவர் முடிவு செய்தார்.

தமிழ்நாடு திரும்பினார்

இதனை அடுத்து அவர் கடந்த செப்.27 அன்று தமிழ்நாடு திரும்பினார்.

அவர் பயணத்துக்கு சாங்கி, திருச்சி ஏர்போர்ட் குழு மற்றும் கூத்தாநல்லூர் சங்கமும் உதவி கரம் நீட்டின.

பின்னர் தமிழ்நாட்டில் அவருக்கு தேவையான சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டது.

முன்பின் தெரியாதோர் உதவி செய்து ஆறுதல்

இதற்கு சிங்கப்பூரில் உள்ள சக ஊழியர்கள், முன்பின் தெரியாதோர் உட்பட பலர் உதவி செய்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ஒரு ஆண்டு காலம் அவரால் வேலை ஏதும் செய்ய முடியாத நிலையில், அவரின் குடும்பத்தின் நிலை கேள்வி குறிதான்.

குணம்பெற்று மீண்டும் சிங்கப்பூரில் பணியாற்றுவேன் என அவர் நம்பிக்கையுடன் கூறியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

பலத்த சத்தம்.. கீழே விழுந்த பெண் மற்றும் ஒரு வயது குழந்தை – சம்பவ இடத்திலேயே மரணம்