“டெல்லி முதலமைச்சரின் பதிவில் எந்த உண்மையும் இல்லை” – சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் விளக்கம்

(Photo: Mothership)

இந்தியாவின் தலைநகரான டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மே 18 வெளியிட்ட ட்விட்டர் பதிவில் மாறுபாடு அடைந்துள்ள கோவிட்-19 வைரஸின் புதிய வகை சிங்கப்பூரில் உருவாகியுள்ளது என்று கூறியிருந்தார்.

இது இந்தியாவில் மூன்றாவது கோவிட் அலையை உண்டாகும் எனவும், அது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறியிருந்தார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து வருத்தமளிக்கிறது – சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்

மேலும், சிங்கப்பூர் நாட்டுடனான விமான போக்குவரத்தையும் நிறுத்தும்படி இந்திய நாட்டின் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக பதிவில் வெளியிட்டிருந்தார்.

இது குறித்த செய்தி NDTV மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ்சில் அதே நாள் வெளியானது.

இதற்கு விளக்கம் அளித்த சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம், டெல்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட தகவல் தவறானது, இந்த மாறுபாடு அடைந்துள்ள வைரஸ் B.1.617 வகையை சார்ந்தது எனவும், இது இந்தியாவில் தான் முதல் கண்டுபிடிக்க பட்டது சிங்கப்பூரில் அல்ல என விளக்கம் அளிக்கப்பட்டது. இது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டதாக விளக்கப்பட்டுள்ளது.

இதற்கு, பலர் அவர்கள் கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்த குறுகிய காலத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டோர் மற்றும் அங்கிருந்து திரும்பியோர் சிங்கப்பூருக்குள் நுழையவோ, சிங்கப்பூர் வழியாக செல்லவோ, அனுமதி முன்னதாகவே சிங்கப்பூர் அரசால் மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் மேலும் 4 புதிய நோய்த்தொற்று பரவல் குழுமங்கள் அடையாளம்