டெல்லி, சிங்கப்பூர் இடையே ‘VTL’ விமான சேவையைத் தொடங்கியது விஸ்தாரா நிறுவனம்!

விஸ்தாரா நிறுவனம் (VISTARA) இன்று (12/03/2022) டெல்லி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் ‘VTL’ விமான சேவையைத் தொடங்கியுள்ளது. மார்ச் மற்றும ஏப்ரல் மாதங்களுக்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே, இந்த விமான சேவையில் பயணிக்க முடியும். அதேபோல், பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை.

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் கனிவான கவனத்திற்கு…இனிமேல் இந்த நடைமுறை இல்லை.!

பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.airvistara.com/in/en என்ற விஸ்தாரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, சிங்கப்பூர் இடையே குறிப்பிட்ட நாட்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்களையும் விஸ்தாரா நிறுவனம் இயக்கவுள்ளது. தலைநகர் டெல்லியில் இருந்து விமானங்கள் இயக்கப்படவுள்ளதால், தொழிலதிபர்கள், வர்த்தகத்துறையினர் அதிக அளவில் பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர், இந்தியா இடையேயான வர்த்தகம் மேலும் வளர்ச்சியடையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

சிங்கப்பூர், பினாங்கு இடையே ‘VTL’ விமான சேவை- ஸ்கூட் நிறுவனம் அறிவிப்பு!

விஸ்தாரா விமான நிறுவனத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines) மற்றும் டாடா சன்ஸ் (Tata Sons) இணைந்து தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.