“செய்யும் வேலையை பொறுப்புடன் செய்யணும்” – ஊழியரின் மோசமான செயலால் கடுப்பான பெண்

delivery-man-throws-parcel-onto-ground
Stomp

டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் கொண்டுவந்த பார்சலை தரையில் வீசி அதை தனது ஷூவால் தள்ளிவிடுவது கேமராவில் சிக்கியுள்ளது.

முக்கியமாக அந்த பார்சலில் கண்ணாடி தண்ணீர் பாட்டில் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களுக்கும் கட்டணம் உயரும்

ஜே&டி டெலிவரி நிறுவனத்தை சேர்ந்த ஊழியரின் இந்த செயலால் பாட்டில் உடைந்ததாகவும் ஸ்டாம்ப் வாசகர் லீனா கூறினார்.

இந்த சம்பவம் பிளாக் 365 புக்கிட் பாடோக் ஸ்ட்ரீட் 31 இல் கடந்த பிப்ரவரி 17 அன்று மாலை 4.26 மணிக்கு நடந்ததாக அதன் வீடியோவைப் அவர் பகிர்ந்துள்ளார்.

வீடியோவில், லீனாவுக்கு சொந்தமான அந்த பார்சலை அவர் தரையில் வீசுகிறார், அப்போது பலத்த சத்தம் கேட்கிறது.

பின்னர் அவர் தனது ஷூவால் பார்சலை கதவுக்கு அருகில் தள்ளி வைப்பதையும் காண முடிந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக J&T நிறுவனத்தை தொடர்பு கொண்ட லீனா, இதனால் தாம் சோகமாகவும் கோபமாகவும் இருப்பதாக கூறினார்.

சிங்கப்பூர் பூங்காவில் காட்டுக் கோழியை பிடித்து தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு ஊழியர்? – சட்டத்தின்படி குற்றம்