சிங்கப்பூரில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களுக்கும் கட்டணம் உயரும்

singapore air-ticket-prices-up-departing-flights
Pic: File/Reuters

சிங்கப்பூரில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும், வரும் 2026 முதல் இயற்கை விமான எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும்.

அந்த இயற்கை எரிபொருளை வாங்குவதற்கு வரி விதிக்கப்படும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பூங்காவில் காட்டுக் கோழியை பிடித்து தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு ஊழியர்? – சட்டத்தின்படி குற்றம்

இதன் காரணமாக பயணிகள், சிங்கப்பூரில் இருந்து செல்லும் விமான டிக்கெட்டுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என சொல்லப்பட்டுள்ளது.

பயண தூரம் மற்றும் பயண வகுப்பு போன்ற காரணிகளைப் பொறுத்து அந்த கட்டணம் அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிரீமியம் என்னும் சொகுசு வகுப்புகளில் பயணிப்பவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

இயற்கை எரிபொருள் விநியோகம் இப்போது தான் தொடங்கப்பட்டுள்ளதால் அதன் கட்டணத்தில் நிலையற்ற தன்மை இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

அதன் காரணமாக பயணிகளுக்கு குறிப்பிட்ட விகிதம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பூங்காவில் காட்டுக் கோழியை பிடித்து தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு ஊழியர்? – சட்டத்தின்படி குற்றம்