சிங்கப்பூர் to இந்தியா விமானங்களுக்கு அதிகரிக்கும் தேவை – டிராவல் ஏஜென்சிகளில் அலைமோதும் கூட்டம்

Photo: Jahabar Sadiq

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் விமானங்களுக்கான தேவை கூடுதலாக அதிகரிக்கும் சூழலில் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்வதாக டிராவல் ஏஜென்சிகள் CNAவிடம் தெரிவித்துள்ளன.

VTL பயண ஏற்பாடு அறிவிப்புக்குப் பிறகு, இந்தியாவிற்கு செல்ல டிக்கெட் கேட்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக ரங்கூன் ஏர் டிராவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரமான சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரு விமானங்கள்…

வழக்கமாக நாள் ஒன்றுக்கு சுமார் 20 வாடிக்கையாளர்கள் வருவதாகவும், அவர்கள் இந்தியாவுக்கான விமான டிக்கெட்டுகளை கேட்பதாகவும் அது கூறியுள்ளது.

ஆனால் நேற்று மட்டும் சுமார் 45க்கும் மேற்பட்ட அழைப்புகள் இந்தியாவுக்கு டிக்கெட் விசாரிக்க வந்ததாகவும் நிறுவனத்தின் இயக்குனர் திரு ஜஹபர் சாதிக் கூறினார்.

விமான அனுமதி அறிவிப்புக்குப் பிறகு, பொதுமக்கள் அவர்களை தொடர்பு கொள்வதாகவும், குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் அல்லது அவர்கள் அலுவலகத்திற்கு நேராக சென்று விமானம் தொடர்பான சாத்தியக்கூறுகளைக் கேட்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால் இதுவரை, VTL எப்போது தொடங்கப்படும் என்று மட்டுமே அதிகாரிகள் கூறியுள்ளனர், எந்த விமானங்கள் மற்றும் அவற்றின் அட்டவணைகள் பற்றி இன்னும் எங்களுக்கு தெரியவில்லை, எனவே கூடுதல் விவரங்களைக் பெற நாங்கள் காத்திருக்கிறோம், ”என்றும் அவர் கூறினார்.

சோழா ஹாலிடேஸ் என்ற டிராவல்ஸ் ஏஜென்சியிலும் இதே நிலைதான், திங்கள்கிழமை முதல் தொடர்ந்து அழைப்புகள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது அனைவரும் (இந்தியர்கள்) பயணம் செய்ய ஆர்வமாக உள்ளனர் என்று ஏஜென்சியின் இயக்குனர் திரு பாலு வெங்கடேஷ் கூறினார்.

டிக்கெட் கட்டணம் அதிகம் இருந்தும்கூட, விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது என்றார் திரு சாதிக்.

இந்தியாவுக்கு அனுமதி: விமானங்களுக்கு திடீர் அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஏஜென்சிகள் – இந்திய ஊழியரின் எதிர்பார்ப்பு