சிங்கப்பூரில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் டெங்கு சம்பவங்கள் 16,000ஐ தாண்டலாம் : NEA..!

Dengue cases expected to exceed 16,000 cases unless immediate action taken: NEA
Dengue cases expected to exceed 16,000 cases unless immediate action taken: NEA

இந்த 2020ஆம் ஆண்டின் மூன்றில் இரண்டு பங்கு இன்னும் வர வேண்டிய நிலையில், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இந்த ஆண்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) எச்சரித்து வருகிறது.

நேற்றைய (ஏப்ரல் 20) ஊடக வெளியீட்டில், ஏப்ரல் மாத நடுப்பகுதியில் கிட்டத்தட்ட 5,800 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக NEA குறிப்பிட்டுள்ளது. இது 2019ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகமாகும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 19வது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

மே முதல் செப்டம்பர் வரை டெங்கு அதிகரிக்கும் உச்ச காலம் என்று குறிப்பிடப்படுகிறது. ஏடிஸ் கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 16,000 சம்பவங்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வாராந்திர புள்ளிவிவரங்கள் அதிகமாக உள்ளது என்றும், அதாவது சுமார் 300 முதல் 400 வரை சம்பவங்கள் பதிவாகின்றன என்றும், மேலும் இது ஒரு பொது சுகாதார கவலையாக இருப்பதாகவும் NEA குறிப்பிட்டுள்ளது.

இந்த 2020ஆம் ஆண்டில் இதுவரை ஐந்து டெங்கு இறப்புகள் குறித்து சுகாதார அமைச்சகத்திற்கு (MOH) அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் NEA குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு DENV-3 என்னும் டெங்கு சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் விதிமுறைகளை மீண்டும் மீறியதற்காக 9 பேருக்கு தலா S$1,000 அபராதம்..!